Volume - 5
சகல கலா வல்லியே - சரஸ்வதி பூஜை பாடல்
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம்(பாதம்) தாங்க..
என் வெள்ளை உள்ளம், தன் தாமரைக்கு தகாது கோலோ,
சகம் ஏழும் அளித்து, உந்தான் உறங்க-ஒழித்தான் பித்தாக
உண்டாகும் வண்ணம் கண்டான்,
சுவை கொள் கரும்பே, சகல கலா வல்லியே!
சுவை கொள் கரும்பே, சகல கலா வல்லியே!
நாடும் பொருட்சுவை , சொற்சுவை தொய் தர நார் கவியும் ,
பாடும் பணியில் பணித்து அருள்வாய், பங்கய ஆசனத்தில்
கூடும் பசும் பொற் கோடி டியே, கன தன குன்றும் ஐம்பார்,
காடும் சுமக்கும் கரும்பே, சகல கலா வல்லியே!
அளிக்கும் செந்தமிழ் தேள் அமுது ஆர்ந்து , உன் அருட் கடலில் ,
குளிக்கும் படிக்கு , என்று கூடும் கொலோ , உள்ளம் கொண்டு தெள்ளி ,
தெளிக்கும் பனுவரபுலவோர் கவி மழை சிந்தக்கண்டு ,
கலிக்கும் கலாப மயிலே , சகல கலா வல்லியே!
தூக்கும் பனுவர துறை தோய்ந்த கல்வியும் , சொற் சுவை தொய்,
வாக்கும் பெருக பணித்து அருள்வாய் வடநூற் கடலும் ,
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் சென்னாவில் நின்று ,
காக்கும் கருணைக்கடலே , சகலகலா வல்லியே!
பஞ்பிதம் தரும் செய்ய பொற்பாத பங்கேருஹம் என்,
நெஞ்ச தடத்து அலராதது என்னே நெடுதால் கமலத்து ,
அஞ்ச துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளை,
கஞ்ச தவிசு ஒத்திருந்தாய் , சகலகலாவல்லியே!
பண்ணும் பரதமும் கல்வியும் , தீஞ்சொற் பனுவலும் , யான் ,
என்னும் பொழுது எளிது எய்த நல்காய், எழுதா மறையும்,
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்,
கண்ணும் கருத்தும் நிறைந்தாய், சகலகலா வல்லியே!
பாட்டும், பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என் பால் ,
கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய், உளம் கொண்டு தொண்டர் ,
தீட்டும் கலை தமிழ் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்,
காட்டும் வெல் ஓதிமப்பேடே , சகலகலா வல்லியே!
சொல்வீர் பணமும் , அவதானமும் கல்வி சொல்ல வல்ல ,
நல் வித்தையும் விதையும் தந்து அடிமை கொள்வாய் , நளினி ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சின்தாமை நல்கும் ,
கல்வி பெரும் செல்வ பேரே , சகலகலா வல்லியே!
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய் ஞானத்தில் தோற்றம் என்ன ,
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம் தொய புழைக்கை ,
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசு அன்னம் நானா நடை,
கற்கும் பதாம் படம் பயத்தாலே , சகலகலா வல்லியே!
மண் கண்ட வெண் குடை கீழாக , மேற்ப்பட்ட மன்னனும் என்,
பன் கண்ட அளவில் பணிய செய்வாய் , படைப்போன் முதலாம் ,
வின் கண்ட தெய்வம் பல கோடி உண்டேனும் , விளிம்பில் உன்னை போல்
கண் கண்ட தெய்வம் உளதோ , சகலகலா வல்லியே!
No comments:
Post a Comment